19.8 C
New York
Thursday, September 11, 2025

மைக்ரோசொப்ட் 365 சேவைகளில் பிரச்சினை.

மைக்ரோசொப்ட் 365 சேவைகளில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

அவுட்லுக் போன்றவற்றில் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக நேற்று இரவு 10 மணியளவில் 1,000க்கும் மேற்பட்ட புகார்கள் கிடைத்துள்ளன.

பிரச்சினைக்கான காரணம் மற்றும் அது தீர்க்கப்படுவதற்கான கால அளவு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஜெர்மனியிலும் இதேபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து மைக்ரோசொப்ட் X தளத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளது.

அதில், “பயனர்கள் அவுட்லுக் மற்றும்  சில சேவைகளை அணுக முடியாத சிக்கலை நாங்கள் தற்போது ஆராய்ந்து வருகிறோம்.”

சிக்கலின் அளவைப் புரிந்து கொள்ள வாடிக்கையாளர்கள் வழங்கிய தரவு மற்றும் பதிவுகளை நிறுவனம் தற்போது பகுப்பாய்வு செய்து வருகிறது.

இந்தச் சிக்கல் பல்வேறு மைக்ரோசொப்ட் 365 சேவைகளைப் பாதிக்கிறது என்பதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.

அதேவேளை நேற்றிரவு 11:50 மணியளவில், மைக்ரோசொப்ட் வெளியிட்ட அறிவிப்பில், பாதிக்கப்பட்ட பெரும்பாலான சேவைகள் மீண்டு வருவதாகவும், அனைத்து சேவைகளுக்கும் சிக்கல் முழுமையாக தீர்க்கப்படும் வரை நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம்.”என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles