Staufen இல் கடந்த புதன்கிழமை இரவு வீடு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தை அடுத்து இரண்டாவது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தீவிபத்தை அடுத்து வீட்டில் குடியிருந்த இரண் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வியாழக்கிழமை எரிந்த வீட்டிற்குள் இருந்து ஒரு சடலம் மீட்கப்பட்டது.
தொடர்ந்து சிதைவுகளை அகற்றி மோப்பநாய்களின் உதவியுடன் நடத்தப்பட்ட தேடுதலில், மற்றொரு சடலம் மீட்கப்பட்டுள்ளது.
எனினும் சடலம் இனங்காணப்படாத நிலையில் மேலதிக பரிசோதனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min.