Valais கன்டோனில் உள்ள Stalden இல் உள்ள தொழில்துறை மண்டபம் ஒன்று நேற்றிரவு தீயில் எரிந்து நாசமாகியது.
நேற்றிரவு 9 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து, Stalden, Törbel, Visp மற்றும் Lonza ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டனர்.
கடுமையாகப் போராடிய போதும், தொழிற்துறை மண்டபத்தின் பெரும் பகுதி தீயினால் அழிந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
மூலம்- 20min