23.5 C
New York
Thursday, September 11, 2025

கபாப் விசமானதற்கு நோராவைரஸ் தான் காரணம்.

Möhlin இல் கடந்த வாரம் உணவகம் ஒன்றில் கபாப் சாப்பிட்டவர்கள் சுகவீனம் அடைந்தமைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.

கபாப் சாப்பிட்ட 62இற்கும் அதிகமானோர் இரைப்பை நோய்களுக்கு உள்ளாகி மருத்துவ சிகிச்சையை பெற்றனர்.

அவர்களிடமும், உணவகத்திலும் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளை அடுத்து, நோராவைரஸ் கிருமித் தொற்றே இதற்கு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த உணவகத்தினால் தயாரிக்கப்பட்ட cocktail sauce இல் நோரா வைரஸ் கிருமி இருந்தது தெரியவந்துள்ளது.

பலர் நோயுற்றதை அடுத்து சுகாதார அதிகாரிகளால் குறித்த உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

அந்த உணவகம் இன்னமும் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

உரிய தொற்று நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னரே அதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles