Graubünden இல் La Punt இல் நேற்று மாலை, இடம்பெற்ற விமான விபத்தில், இதில் பயணம் செய்த 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.
டென்மார்க்கில் இருந்து வந்த EA-400 ரக ஒற்றை இயந்திர விமானம், Samedan விமான ஓடுதளத்தில் இருந்து நேற்று மாலை 5.20 மணியளவில் மீளத் திரும்பிய போதே விபத்திற்குள்ளாகியது.
ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டு 2 நிமிடங்களில் குடியிருப்புகளுக்கு மேலாக அது தீப்பிழம்பாக மாறி கீழே விழுந்துள்ளது.
டென்மார்க்கை சேர்ந்த சட்டத்தரணி தம்பதிகளும் அவர்களின் மகனுமே இந்த விபத்தில் உயிழந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து சுவிஸ் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

