Graubünden இல் La Punt இற்கு மேலாக, Engadin இல் நேற்று மாலை, சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இது தொடர்பான ஊடக தகவல்களை கன்டோனல் காவல்துறையின் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
விபத்தில் சிக்கியவர்கள் அல்லது விபத்து பற்றிய எந்த தகவலையும் வழங்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்டவர்களின் உடல்நிலை குறித்தும் காவல்துறை அவரால் எந்த தகவலையும் வழங்க முடியவில்லை.
விமானத்தில் எத்தனை பேர் பயணித்தனர் என்று உறுதி செய்யப்படவில்லை.
விமானம் விழுவதற்கு முன்னர் பாரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், தீப்பிழம்பாக அது விழுந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்தில் காணப்பட்டுள்ளனர்.
மூலம்- bluewin