15.8 C
New York
Thursday, September 11, 2025

பிரெஞ்சு மொழி அறிவிப்புகளை கைவிடும் சூரிச் விமான நிலையம்.

சுவிட்சர்லாந்தின் மிகவும் பரபரப்பான சூரிச் விமான நிலையத்தில், பிரெஞ்சு மொழி அறிவிப்புகள் கைவிடப்படவுள்ளது.

இங்கு  ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே அறிவிப்புகள் வெளியிடப்படும்.

அறிவிப்புகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய கருத்தாக்கம் இது என விமான நிலைய இயக்குநர்கள் தெரிவித்தனர்.

“நாங்கள் ஒரு சர்வதேச போக்கைப் பின்பற்றுகிறோம்,” என்று சூரிச் விமான நிலையத்தின் பேச்சாளர்  கூறினார்.

மற்ற விமான நிலையங்களும் பயணிகளின் வசதியில் கவனம் செலுத்த அறிவிப்புகளைக் குறைத்து வருகின்றன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இரண்டாவது சுவிஸ் தேசிய மொழியைக் கைவிடுவதற்கான முடிவு பயனர் தரவின் பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டது என்றும் அவர் தெரிவித்தார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முந்திய, வலைத்தளத்தின் பயன்பாட்டுத் தரவு ஆராயப்பட்டது,  1% பயனர்கள் மட்டுமே பிரெஞ்சு பதிப்பைக் கிளிக் செய்திருப்பது வெளிப்பட்டது.

“இருப்பினும், பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் முழுமையாக புறக்கணிக்கப்படவில்லை.

கிட்டத்தட்ட அனைத்து இணைய உலாவிகளும் ஒருங்கிணைந்த மொழிபெயர்ப்புகளை வழங்குகின்றன.

இதன் பொருள் ஆங்கிலம் அல்லது ஜெர்மன் மொழியில் உள்ள ஒரு வலைத்தளத்தை ஒரே கிளிக்கில் மற்றொரு மொழியில் மொழிபெயர்க்க முடியும்.

இதற்கமைய  ஜூலை முதல், தரை ஊழியர்கள் பிரெஞ்சு மொழியில் அறிவிப்புகளை வெளியிடமாட்டார்கள். பயணிகள் சேவை ஊழியர்களுக்கான தொடர்புடைய மொழித் தேவை ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles