Ittigen இல் தொழிற்கூடத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உழவு இயந்திரம் ஒன்றைப் பழுதுபார்த்துக் கொண்டிருந்த போது, அதற்கும் ஒட்டுவேலை செய்யும் மேசைக்கும் இடையே அகப்பட்டு பணியில் இருந்த ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 19 வயது இளைஞன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.