4.8 C
New York
Sunday, March 29, 2026

4 வாகனங்கள் அடுத்தடுத்து விபத்து- 4 பேர் காயம்.

Hochbergerstrasse இல், கார் ஒன்று, பேருந்துடன் மோதியதை அடுத்து எதிரே வந்த இரண்டு வாகனங்களும் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், ஒரு பயணி மற்றும் இரண்டு கார் ஓட்டுநர்கள் காயமடைந்தனர்.

நேற்றுக் காலை 11:50 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

Hochbergerstrasse இல் பாதை 36 பேருந்து சென்று கொண்டிருந்த போது, மோட்டார் பாதை வெளியேறும் இடத்திற்கு அருகில், ஒரு கார் பேருந்துடன் மோதியதை அடுத்தே, இந்த அடுத்தடுத்த விபத்துக்கள் நேரிட்டன.

மூலம் –polizeinews.ch

Related Articles

Latest Articles