Derendingen இல் உள்ள Coop எரிபொருள் நிலையத்தில், ஆயுத முனையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கத்தியுடன் நுழைந்த திருடன் எரிபொருள் நிலைய பணியாளரை தாக்கி காயப்படுத்தி விட்டு, பணம் மற்றும் சிகரெட்களை திருடிச் சென்றுள்ளான்.
காயமடைந்த பணியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Solothurn கன்டோனல் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மூலம் – 20min