17.5 C
New York
Wednesday, September 10, 2025

சூரிச்சில் நேற்றிரவு தீவிபத்து -4 பேர் காயம்.

சூரிச்சின் 3ஆவது மாவட்டத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.

அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் கீழ்த் தளத்திலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இரவு 8 மணியளவில் தீப்பற்றி எரியத் தொடங்கியதும் குடியிருப்பில் இருந்தவர்கள் வெளியேறினர்.

ஒருவர் மட்டும் முதலாவது தளத்தில் புகை மற்றும் நெருப்பில் சிக்கியிருந்த நிலையில் தீயணைப்பு பிரிவினரால் மீட்கப்பட்டார்.

காயமடைந்த 2 பேர் எரிகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஏனைய இருவருக்கும் அந்த இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

தீவிபத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

மூலம்- 20min

Related Articles

Latest Articles