ரோமில் உள்ள புனித மரியா மாகியோர் தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸின் கல்லறையின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மின்விளக்கில் ஒளிரும் சிலுவையின் கீழே, திருத்தந்தையின் பெயர் பொறிக்கப்பட்ட கல்லறையில், ஒற்றை வெள்ளை ரோஜா ஒன்று, வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த திருத்தந்தை இத்தாலிய தலைநகரில் உள்ள நான்கு முக்கிய பசிலிக்காக்களில் ஒன்றான தேவாலயத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டார்.