Kölliken இல் ஏடிஎம் இயந்திரம் ஒன்றைக் குண்டு வைத்து தகர்த்தவர்கள், பணத்தை எடுக்காமல் தப்பிச் சென்றுள்ளனர்.
நேற்று அதிகாலை 3.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெடிப்புச் சத்தம் கேட்டு Aargau பொலிசார் சம்பவ இடத்துக்குச் சென்ற போது, ஏடிஎம் இயந்திரத்தின் பணம் அப்படியே இருந்துள்ளது.
இரண்டு பேர் அந்தப் பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
அவர்களை தேடிப்பிடிக்கும் முயற்சி வெற்றியளிக்கவில்லை.
ஏடிஎம் இயந்திரத்தில் பணம் கொள்ளையடிக்கப்படாமல் இருந்தமை பொலிசாருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூலம்- bluewin

