ஒஸ்ரியாவில் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள சுவிஸ் இராணுவத்தினர் காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர்.
ஒஸ்ரியாவில் சுவிஸ் இராணுவத்தின் ஆயிரம் பேர் கொண்ட பற்றாலியன் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்து இரண்டு சுவிஸ் இராணுவத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் நச்சுப் புகையை சுவாசித்த தால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இராணுவப் பயிற்சி மே 9ஆம் திகதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- bluewin