Ecuvillens இல் வாகனத் தரிப்பிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தை அடுத்து 9 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
குடியிருப்பு தொகுதி ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் நேற்றுக்காலை 7.30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டதாக Fribourg கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
தீயணைப்பு பிரிவினர் உடனடியாக செயற்பட்டு தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர்.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min