18.2 C
New York
Friday, May 2, 2025

கைகலப்பில் இளைஞனுக்கு வெட்டுக்காயம்.

 Olten இல்  இடம்பெற்ற கைகலப்பு சம்பவம் ஒன்றில்  17 வயது இளைஞன் காயம் அடைந்துள்ளார்.

CBD coffee shop முன்பாக புதன்கிழமை  பிற்பகல் 3.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அடையாளம் தெரியாத இரண்டு 30 வயது மதிக்கத்தக்கவர்கள் குறித்த இளைஞனை தாக்கியுள்ளனர்.

இதன் போது வெட்டுக் காயங்களுக்கு உள்ளான இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles