திருடிய காருடன் தப்பிச் செல்ல முயன்ற மூவரை Thurgau கன்டோனல் பொலிசார் கைது செய்துள்ளனர்.
Erlen இல் புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் தடுத்த போது வேகமாகத் தப்பிச் சென்ற காரை பொலிசார் துரத்திச் சென்றனர்.
கார் விபத்துக்குள்ளாகிய நிலையில் வயலுக்குள் காரை கைவிட்டு அதிலிருந்த மூவர் தப்பிச் செல்ல முயன்றனர்.
அப்போது பொலிசார் 34 வயது அல்ஜீரியரையும், 16 மற்றும் 17 வயதுடைய பயணிகளையும் துரத்திப் பிடித்துள்ளனர்.
மூலம்- 20min

