Winterthur காட்டுப் பன்றியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
73 வயதுடைய நபர் ஒருவர், Zürcherstrasse நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, Bläsihofstrasse சந்திப்புக்கு அருகே காட்டுப் பன்றியுடன் மோதினார்.
நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் காட்டுப் பன்றி உயிரிழந்துள்ளது.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூலம்- 20min.

