A23 வீதியில், Roggwil அருகே ட்ரக் ஒன்றுடன் கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக Thurgau பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காரை ஓட்டி வந்த 57 வயது நபர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
அவர் காருக்குள் சிக்கியிருந்த நிலையில் பலத்த போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டார்.
ட்ரக் ஓட்டுநரும் காயம் அடைந்தார்.
மூலம்- 20min.