பெர்ன் நோக்கிய A1 நெடுஞ்சாலையில், Birmenstorf, அருகே ஒரு விநியோக வாகனம், பிரேக் போடாமல், நின்று கொண்டிருந்த கார்கள் மீது மோதியுள்ளது.
நேற்றுக்காலை 7.20 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஐந்து வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன.
இந்தச் சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்தனர், அவர்களில் இருவர் படுகாயமடைந்தனர், அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
Aargau கன்டோனல் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலம்- 20min