30.1 C
New York
Wednesday, August 19, 2026

இலங்கை சிறுவனின் வயிற்றில் உலகின் மிகநீளமான குரங்கு நாடாப் புழு!

உலகின் மிகநீளமான குரங்கு நாடாப்புழு இலங்கைச் சிறுவன் ஒருவனின் வயிற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் மருத்துவர் சுரங்க துலமுன்ன தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவனின் வயிற்றில் இருந்தே இந்த குரங்கு நாடாப் புழு அகற்றப்பட்டுள்ளது.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட பல மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, இந்த நாடாப்புழு அடையாளம் காணப்பட்டது.

இந்த மாதிரிகளை பகுப்பாய்வு செய்தபோது, உலகில் ​​அறியப்பட்ட மிக நீளமான குரங்கு நாடாப்புழு இது என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

நாடாப்புழு முட்டைகளை பரிசோதித்ததில் அவை பெர்டியல்லா (Bertiella) இனத்தைச் சேர்ந்தவை என்பது உறுதி செய்யப்பட்டது.

பொதுவாக, இந்த வகை நாடாப்புழு 70 செ.மீ நீளம் வரை வளரும்.

எனினும், இதுவரை, உலகில் பதிவு செய்யப்பட்ட மிக நீளமான பெர்டியல்லா நாடாப்புழு 40 செ.மீ. வரையே வளர்ந்திருந்தது.

குருநாகலைச் சேர்ந்த சிறுவனின் வயிற்றில் காணப்பட்ட நாடாப்புழு 70 செ.மீ. வரை காணப்பட்டது மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Related Articles

Latest Articles