29.6 C
New York
Friday, July 3, 2026

துறைமுகத்தில் பற்றியெரிந்த படகுகள்.

Zug ஏரியில், உள்ள துறைமுகத்தில் நேற்று மதியம் ஏற்பட்ட தீவிபத்தில் படகுகள் எரிந்து நாசமாகியுள்ளன.

நேற்று மதியம் துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், பல கிலோமீட்டர் தூரத்திற்கு கரும் புகை மண்டலம் காணப்பட்டது.

தீ விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பல படகுகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன. மாலை 4 மணிக்குப் பின்னர் தீ முற்றாக அணைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மோட்டார் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பாய்மரப் படகுகள் மற்றும் இரண்டு மோட்டார் படகுகள் என, மொத்தம் ஐந்து படகுகள் சேதம் அடைந்ததாக ஜூக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை மாலை தெரிவித்துள்ளது.

ஒரு மோட்டார் படகு மற்றும் ஒரு பாய்மரப் படகு  என்பன, முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.

மோட்டார் படகில் தீ விபத்து ஏற்பட்டபோது, ​​இரண்டு பெரியவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் இருந்தனர் என்றும், அவர்கள் சரியான நேரத்தில் பாதுகாப்பாக மீட்கப்பட்டதால், காயமின்றி தப்பினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையைச் சுவாசித்ததால், பாதிக்கப்பட்ட நான்கு பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles