பிராங்கிற்கு எதிரான அமெரிக்க டொலரின் மதிப்பு 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
அண்மைய வாரங்களில் டொலரின் மதிப்பு குறைந்து வருகிறது.
நேற்று பிராங்க் மற்றும் யூரோவுக்கு எதிராக, டொலரின் மதிப்பு, இந்த ஆண்டில் ஆக குறைந்த அளவைத் தொட்டது.
யூரோவிற்கு எதிராக, அமெரிக்க டொலர் 2021 க்குப் பின்னர், பலவீனமான நிலையில் உள்ளது.
நேற்று நண்பகலில் டொலரின் மதிப்பு, 0.7872 பிராங் என்ற குறைந்தபட்ச நிலையை எட்டியது. யூரோ 1.1832 ஆக உயர்ந்தது.
இதற்கிடையில், யூரோவிற்கு எதிராக பிராங்கும் ஓரளவு வலுப்பெற்றது.
தொடர்ந்து எட்டு நாட்களாக டொலருக்கு எதிராக யூரோவின் மதிப்பு உயர்ந்து வருவதாக Commerzbank கூறுகிறது.
மூலம்- swissinfo