4.8 C
New York
Monday, December 29, 2025

யூரோ கிண்ண இறுதிப் போட்டியை பார்வையிட வருகிறார் இளவரசர் வில்லியம்.

ஐரோப்பிய மகளிர் கால்பந்து சாம்பியன் ஷிப்பின் இறுதிப் போட்டியில்,  இளவரசர் வில்லியம் சிறப்பு பார்வையாளராக கலந்து கொள்ளவுள்ளார்.

 ஞாயிற்றுக்கிழமை பாசல் மைதானத்தில்  இந்த இறுதிப் போட்டி நடக்கவுள்ளது.

இங்கிலாந்து கால்பந்து சங்கத்தின் தலைவராக வில்லியம், ஜூலை 27 ஆம் திகதி,  யூரோ 2025 போட்டியின் இறுதி ஆட்டத்தைப் பார்வையிடுவதற்காக,  பாசலுக்குப் பயணம் செய்வார்.

கென்சிங்டன் அரண்மனையின் பேச்சாளர் இதை உறுதிப்படுத்தினார்.

அரையிறுதியில் இங்கிலாந்து அணி இத்தாலியை வீழ்த்தியது.

பாசலில் உள்ள சென் ஜேக்கப்-பார்க் மைதானத்தில் இங்கிலாந்து அணி, ஜெர்மனி அல்லது ஸ்பெயினை எதிர்கொள்ளும்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles