ஜெர்மன் மற்றும் சுவிசில் உள்ள 31 விமான நிலையங்களின் பாதுகாப்புத் தரநிலையில், சூரிச் விமான நிலையம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
லீப்ஜிக் மற்றும் மியூனிக் விமான நிலையங்கள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.
ஜெனீவா மற்றும் பாஸல் விமான நிலையங்கள், முறையே 26 மற்றும் 30வது இடங்களைப் பிடித்தன.
மிகப்பெரிய விமான நிலையமான பிராங்க்போர்ட் 14வது இடத்தைப் பிடித்தது.
பெர்லின்-பிராண்டன்பர்க் விமான நிலையம் 15வது இடத்தைப் பிடித்துள்ளது..
வடக்கு ஜெர்மனியில் உள்ள லூபெக் தரவரிசையில் கடைசி இடத்தில் உள்ளது.
ஜெர்மன் விமானிகள் சங்கமான வெரினிகுங் காக்பிட் (VC), 1978 முதல் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பாதுகாப்பு தரநிலைகளின்படி ஜெர்மன் விமான நிலையங்களை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்து வருகிறது.
இந்த ஆண்டு, சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் (SWISS) மற்றும் எடெல்வைஸின் தொழில்முறை விமானிகள் சங்கமான ஏரோப்பர்ஸின் விமானிகளும், முதல் முறையாக திட்டக் குழுவின் இணைத்துக் கொள்ளப்பட்டு சுவிசை உள்ளடக்கியதாக இந்த பாதுகாப்பு தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo