ஜெர்மனியின் தென்பகுதியில் உள்ள Kitzingen நகரில் 200 கிலோ கொகெய்ன் போதைப் பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகமூடியணிந்த சந்தேகத்துக்குரிய நபர்கள் தொடர்பாக விவசாயி ஒருவர் கடந்த திங்கட்கிழமை பொலிசாருக்கு தகவல் கொடுத்திருந்தார்.
இதையடுத்து, பொலிசார் ஏடிஎம் கொள்ளையர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்களைப் பின்தொடர்ந்து வழிமறித்துப் பிடித்தனர்.
அப்போது பொலிஸ் மோப்ப நாய், வாகனத்தில் 20 கொள்கலன்களில் 200 கிலோ கொகெய்ன் போதைப் பொருள் இருப்பதை காட்டிக் கொடுத்தது.
அதன் மதிப்பு 10 மில்லியன் யூரோ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது, 19 மற்றும் 25 வயதுடைய பிரெஞ்சு இளைஞர்களும், 49 வயதுடைய சுவிஸ் பிரஜையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூலம்- bluewin