பாடன் காவல் நிலையத்திலிருந்து கடந்த வியாழக்கிழமை, கைவிலங்கு போடப்பட்ட நிலையில் தப்பிச் சென்ற 23 வயது அல்பேனியர், 6 நாட்களுக்குப் பின்னர் சூரிச்சில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைவிலங்கு போடப்பட்டிருந்த போதும், கைதிகள் கொண்டு செல்லப்பட்ட போது அவர் தப்பிச் சென்றிருந்தார்.
வெள்ளிக்கிழமை லேகர்ன் பகுதியில் அவர் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, பெரிய அளவிலான தேடுதல் நடத்தப்பட்ட போது அவர் பொலிசாரிடமிருந்து மயிரிழையில் தப்பித்து, காணாமல் போனார்.
ஆர்காவ் கன்டோனல் காவல்துறையின் புலனாய்வு அதிகாரிகள் புதன்கிழமை நண்பகல் சூரிச் நகரில் அந்தக் கைதியைக் கண்டுபிடித்து கைது செய்தனர்.
23 வயது அல்பேனியர், கைவிலங்கு போடப்பட்ட நிலையிலேயே காணப்பட்டார் எனினும், அதன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன.
அவருடன் அருகில் காணப்பட்ட 41 வயது அல்பேனியரும் கைது செய்யப்பட்டார்,
அவர் தப்பிச் சென்ற நபருக்கு உதவ செவ்வாய்க்கிழமை சுவிட்சர்லாந்திற்குள் நுழைந்தார்.
இருவரும் ஆர்காவ்வில் காவலில் உள்ளனர் என்று ஆர்காவ் பொலிசார் அறிவித்துள்ளனர்.
அவர் தப்பிச்சென்ற பாதை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை
மூலம்- 20min.