ஒபர்ஹோஃபென் நகரில் உள்ள பிரதான வீதியில் உள்ள ஒரு கடையில் அடையாளம் தெரியாத ஒருவர் திங்கட்கிழமை காலை, ஆயுத முனையில் கொள்ளையடித்தார்.
கடைக்குள் நுழைந்த அவர், ஒரு ஊழியரை துப்பாக்கியை காட்டி மிரட்டி, பணத்தை ஒப்படைக்குமாறு கோரினார்.
பின்னர் அவர் கடையை விட்டு வெளியேறி கொள்ளையடித்த பொருட்களுடன் தப்பி ஓடினார்.
பெர்ன் பொலிசார் உடனடியாக தேடுதல் வேட்டையில் இறங்கிய போதிலும், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
மூலம்- 20min

