பெர்ன் சோலிகோஃபெனில் திங்கட்கிழமை அதிகாலை 5:00 மணியளவில் ,இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.
பெர்னில் இருந்து சோலிகோஃபென் நோக்கி பயணித்த ஒரு பெண் ஓட்டுநர், ஒரு சைக்கிள் ஓட்டுநர் மீது மோதினார். சைக்கிள் ஓட்டுநர் விழுந்து பலத்த காயமடைந்தார்.
ஆனால் அந்தப் பெண் தொடர்ந்து வாகனத்தை ஓட்டிச் சென்று, சில மீட்டர்கள் கழித்து, முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு காரில் மோதினார். இதில், அந்தக் காரில் இருந்த மூன்று பயணிகள் காயமடைந்தனர்.
இந்த விபத்தினால். அருகிலுள்ள ரயில் தண்டவாளத்தில் கார் ஏறியதுடன், அதன் ஓட்டுநர் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தார் என பெர்ன் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
காயமடைந்த ஐந்து பேரையும், மூன்று அம்புலன்ஸ் குழுக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றன.
விபத்தை அடுத்து, வீதி சுமார் மூன்று மணி நேரம் மூடப்பட்டதுடன், ரயில் போக்குவரத்தும் பல மணி நேரம் நிறுத்தப்பட்டது.
மூலம்- 20min

