ஜெர்மாட்டில் உள்ள வாலிசர்கேன் உணவகத்தின் மூன்று நிர்வாகிகளுக்கு கடந்த வியாழக்கிழமை, வலைஸ் கன்டோனல் நீதிமன்றம், தண்டனை விதித்ததுள்ளது.
அவர்கள் ஒரு அதிகாரப்பூர்வ செயலைத் தொடர்ந்து தடுத்ததற்காக குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு அபராதம் மற்றும் இடைநிறுத்தப்பட்ட தண்டனைகள் விதிக்கப்பட்டன.
இந்த தண்டனைகள் முக்கியமாக 2021 இல் நடந்த சம்பவங்களுடன் தொடர்புடையவை.
கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, கேட்டரிங் நிறுவனங்களுக்கான நடைமுறையில் உள்ள விதிமுறைகளை பிரதிவாதிகள் பலமுறை பின்பற்ற மறுத்துவிட்டனர்.
குறிப்பாக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்வதன் மூலம் அதனை மீறினர்.
முத்திரைகளை உடைத்தல், அச்சுறுத்தல் விடுத்தல் மற்றும் பலமுறை அவமதித்ததற்காகவும் நீதிமன்றம் பிரதிவாதிகளை குற்றவாளிகளாகக் கண்டறிந்தது.
அவர்களுக்கு 3,360 பிராங் , 7,380 பிராங் மற்றும் 8,250 பிராங் இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் 1,800 பிராங், 1,920 பிராங் மற்றும் 1,950 பிராங் தண்டனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனைக்கு எதிராக மூன்று நிர்வாகிகளும் கூட்டாட்சி நீதிமன்றத்தில் முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo

