39 C
New York
Friday, July 3, 2026

போஸ்ட் பஸ் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று பிற்பகல் ஒரு நிமிட மௌன அஞ்சலி.

பிரிபோர்க் போஸ்ட் பஸ் தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை நினைவுகூரும் வகையில், இன்று பிற்பகல் 2 மணிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

போஸ்ட் பஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஸ்டீபன் ரெக்லி இதனை அறிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து முழுவதும் உள்ள ஓட்டுநர்கள் இந்த நேரத்தை கடைப்பிடிப்பதற்காக வாகனங்களை நிறுத்தி, ஹோர்ன் ஒலிப்பதன் மூலம் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துவார்கள். இந்தப் பங்கேற்பு தன்னார்வமாக இருக்கும்.

அதேவேளை, போஸ்ட் பஸ்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி பங்களிப்பை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளையும் நிறுவனம் ஆராயும். தற்போதைக்கு, நிறுவனம் இன்னும் அதிர்ச்சி மற்றும் ஒற்றுமையின் கட்டத்தில் உள்ளது என்றும் ரெக்லி கூறியுள்ளார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles