39 C
New York
Friday, July 3, 2026

சீஷெல்ஸ் படகு விபத்து- இரண்டு சுவிஸ் நாட்டவர்களை காணவில்லை.

சீஷெல்ஸ் தீவுக்கூட்டத்தில் படகு மூழ்கிய விபத்தை அடுத்து, இரண்டு சுவிஸ் நாட்டவர்கள் காணாமல் போயுள்ளனர். மேலும் ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளதாக சுவிஸ் வெளியுறவு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட ஐந்து சுவிஸ் பயணிகளும் “சூழ்நிலையில் நன்றாக இருக்கிறார்கள்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவு மற்றும் தனியுரிமை பாதுகாப்பு காரணங்களுக்காக, மேலும் விவரங்களை வழங்க சுவிஸ் வெளியுறவு அமைச்சு மறுத்துவிட்டது.

மடகாஸ்கரில் உள்ள சுவிஸ் பிரதிநிதியும், சீஷெல்ஸில் உள்ள கௌரவ தூதரகமும் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் சுவிஸ் நாட்டவர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும், சுவிஸ் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விபத்து, மேரி லூயிஸ் தீவுக்கு அருகில் நிகழ்ந்தது. மூழ்கிய படகு சுழியோடும் பயணங்களுக்கு ஒரு தளமாக பயன்படுத்தப்பட்டது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles