பாசல்-லேண்ட்ஷாஃப்ட், முட்டென்ஸ் அருகே A2 மோட்டார் பாதையில் இன்று அதிகாலை நடந்த ஒரு போக்குவரத்து விபத்தில் ஒரு பெண் இறந்தார்.
பல வாகனங்கள் சிக்கிய இந்த விபத்து இன்று அதிகாலை 4 மணிக்கு முன்னதாக முட்டென்ஸில் உள்ள A2 மோட்டார் பாதையில், இடம்பெற்றது.
விபத்தில் ஒரு இளம் பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார். இறந்தவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
விபத்துக்கான காரணம் தற்போது தெளிவாகத் தெரியவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அனைத்து திசைகளிலும் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மூலம்- bluewin

