17.8 C
New York
Thursday, May 14, 2026

ட்ரோன் தாக்குதலை அடுத்து பற்றியெரியும் டுபாய் விமான நிலைய எரிபொருள் களஞ்சியம்.

டுபாய் விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் களஞ்சியம் ட்ரோன் தாக்குதலை அடுத்து, தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீயை கட்டுக்குள் கொண்டுவர அவசர சேவைகள் செயல்பட்டு வருவதாக எமிரேட் அதிகாரிகள் X தளத்தில் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை, காயங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. சம்பவம் குறித்த கூடுதல் விவரங்கள் – மற்றும் தீயின் அளவு – உடனடியாக கிடைக்கவில்லை.

அதேவேளை இன்று அதிகாலை விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக “Flightradar” தெரிவித்துள்ளது. பல விமானங்கள் விமான நிலையத்தைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

மூலம்- 20min

Related Articles

Latest Articles