பராகிளைடிங் விபத்தில் சிக்கிய 32 வயது நபர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வெய்ஷோர்ன் சிகரத்திலிருந்து குதித்து கார்மென்னாவை நோக்கி பறந்த போது, ஒரு பாறையில் மோதி விழுந்து, செங்குத்தான பனியில் சுமார் 100 மீட்டர் கீழே விழுந்தார்.
புதன்கிழமை காலை 11:50 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
செக் குடியரசைச் சேர்ந்த அந்த நபல் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சுரில் உள்ள கிராபுண்டனின் கன்டோனல் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
அவர் வெள்ளிக்கிழமை காயங்களால் உயிரிழந்துள்ளார்.
மூலம்- 20min

