ஜெனீவாவில் திங்கள்கிழமை இரவு இரவு 8 மணியளவில், குறைந்தது 14,000 வீடுகள் மின்தடையால் பாதிக்கப்பட்டன.
இந்த மின்வெட்டை அடுத்து, 10,000 வீடுகளுக்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது.
அதேசமயம், 4,500 வீடுகள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டியிருந்தது.
டார்டாக்னி, சாட்டினி, அவுசி, அவுல்லி மற்றும் பெர்னெக்ஸ் ஆகிய நகராட்சிகளில் இந்த பாதிப்பு ஏற்பட்டது.
“இரவு 10.12 மணிக்கு வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது,” என்று ஜெனீவா தொழில்துறை சேவைகளின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் பெர்னெட், தெரிவித்தார்.
“திங்கள்கிழமை மாலையில் மாகாணம் முழுவதும் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன்போது, விழுந்த மரங்கள் அல்லது கிளைகள் காரணமாக வெர்பாய்ஸிலிருந்து வரும் பல மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன,” என்றும் அவர் மேலும் கூறினார்.
மேலும், திங்கட்கிழமை மாலை பெர்ன் மாகாணத்தில் ஏற்பட்ட கடுமையான இடியுடன் கூடிய மழையால் விட்டுவிட்டு மின்வெட்டு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டன. நள்ளிரவுக்கு முன்பே மின்வெட்டு சரிசெய்யப்பட்டது.
மூலம்- swissinfo


