21.3 C
New York
Tuesday, August 11, 2026

வறட்சியால் பாசல் சென் ஆல்பன் படகுச் சேவை நிறுத்தப்பட்டது.

குறைந்த நீர்மட்டம் காரணமாக, பாசலில் உள்ள சென் ஆல்பன் படகுச் சேவை திங்கட்கிழமை காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை அது இடைநிறுத்தப்பட்டிருக்கும்.

ரைன் நதியில் உள்ள மற்ற மூன்று படகுகளும் தொடர்ந்து இயங்கி வருகின்றன என்று பாசல் படகுச் சேவை அறக்கட்டளையின் தலைவர் டீட்டர் பூலர்தெரிவித்தார்.

மற்ற மூன்று படகுகளைப் போலல்லாமல், “வைல்ட் மா” படகுச் சேவையால் பயணிக்க முடியாததற்குக் காரணம் குறைந்த நீர்மட்டம் மட்டுமல்ல, அதன் புவியியல் இருப்பிடமும் ஆகும்.

மற்ற படகுகளை விட இது மேற்குக் காற்றுக்கு அதிகமாக ஆட்படுகிறது. காற்று நேரடியாகப் படகை நோக்கி வீசும்போது, ​​ரைன் நதியில் உள்ள நீரோட்டம் படகைச் செலுத்துவதற்கு மிகவும் பலவீனமாக இருக்கிறது.

“வைல்ட் மா” படகுச் சேவையானது, கிரேட்டர் பாசலில் உள்ள சென் ஆல்பன் பள்ளத்தாக்கை, லெஸ்ஸர் பாசலில் உள்ள வெட்ஸ்டைன் மாவட்டத்துடன் இணைக்கிறது.

அதேவேளை குறைந்த நீர்மட்டம் மற்றொரு உள்ளூர் பாரம்பரியமான பாசல் ரைன் நீச்சல் போட்டிக்குத் தடையாக அமையவில்லை: இந்த ஆண்டு அந்தப் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்.

இந்த பாரம்பரிய நிகழ்வின் 46வது பதிப்பு, திட்டமிட்டபடி இன்று மாலை 6 மணிக்குத் தொடங்கும் என்று சுவிஸ் உயிர் காக்கும் சங்கம் அறிவித்தது.

மூலம்-swissinfo

Related Articles

Latest Articles