8.3 C
New York
Sunday, March 29, 2026

சுவிசில் நாளை இரத்த மழை – வானமும் செம்மஞ்சளாக மாறும்.

நாளை முதல் சுவிட்சர்லாந்தின் வானம் மீண்டும் செம்மஞ்சள் நிறத்தில் தோன்றும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் காற்றின் ஓட்டம் மீண்டும் சஹாரா தூசுபடலத்தை சுவிட்சர்லாந்திற்கு கொண்டு வரவுள்ளது.

இதன் செறிவைப் பொறுத்து காற்று செம்மஞ்சள் நிறத்திற்கு மாறும்.

MeteoNews இன் வானிலை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, சூரியனின் கதிர்கள் மற்றும் வெப்பநிலையில் தூசுகளின் தாக்கம் எந்தளவு பெரியதாக இருக்கும் என்பதை மதிப்பிடுவது தற்போது கடினமாக உள்ளது.

இதனால், நாளை மாலை, இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதுடன் சஹாரா தூசின் விளைவாக இரத்த மழையும் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மூலம் –  20min

Related Articles

Latest Articles