19.9 C
New York
Wednesday, May 13, 2026

ஜெனீவாவில் உணவகம் திறந்த ரொனால்டினோ – ரசிகர்கள் திரண்டதால் ஓட்டம்.

பிரேசிலின் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோவைப் பார்க்க ஜெனிவாவில் பாரிய ரசிகர் பட்டாளம் திரண்டதால் அவர் தனது பயணத்தை சுருக்கிக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்.

ஜெனீவாவிற்கு அருகிலுள்ள வெர்னியரில், R10 என்ற தனது பர்கர் உணவகத்தின்  முதல் கிளையை நேற்று முன்தினம் ரொனால்டினோ திறந்து வைத்தார்.

பெயர் அவரது ஜெர்சி எண் R10 ஐக் குறிக்கும் வகையில் அவரது உணவகத்துக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அவர்  தனது உணவகத்திற்கு வருகை தந்த போது, நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால், குழப்பமான நிலை ஏற்பட்டது.

கூட்டத்தைக் கட்டப்படுத்த முடியாமல் பாதுகாப்பு அதிகாரிகள் திணறினார்கள்.

இதனால் அவர் அவசரஅவசரமாக உணவகத்தை திறந்து வைத்து விட்டு, அங்கிருந்து விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்.

ஆங்கிலம் மூலம் – 20min

Related Articles

Latest Articles