14.6 C
New York
Sunday, September 27, 2026

ட்ரக் மீது கார் மோதிய விபத்தில் 18 பேர் காயம் – மீட்புப் பணியில் ஹெலிகள்.

சிமென்டலில் உள்ள வெய்சென்பர்க் அருகே டார்ஸ்டெட்டனுக்கும் ஓபர்வில்லுக்கும் இடையே உள்ள கன்டோனல் வீதியில், நேற்று பிற்பகல் 3:15 மணியளவில், இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்தனர்.

கார் ஒன்று பாதையை கடந்து, எதிரே வந்த டிரக் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

- Advertisement -

ட்ரக் ஓட்டுநர் படுகாயம் அடைந்து ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சிறிய காயம் அடைந்த 17 பேருக்கு, மருத்துவக் குழுவினரால் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

ட்ரக்கில் இருந்த சுமார் 40 பயணிகள், காயங்களின்றி தப்பினர்.

விபத்து நடந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகளுக்காக பல ஹெலிகொப்டர்களும், 20 அம்புலன்ஸ்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

விபத்தை அடுத்து கன்டோனல் வீதி மூடப்பட்டிருந்தது.

ஆங்கிலம் மூலம் – 20min

Related Articles

Latest Articles