21.2 C
New York
Sunday, June 28, 2026

வாகனங்கள் மோதிக் கொண்டதில் 6 பேர் காயம்.

டிசினோவில் உள்ள கொலினா டி’ஓரோவில் (Collina d’Oro) நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் காயமடைந்தனர்.

33 வயதுடைய கார் சாரதி ஒருவர்,தனது வாகனத்தில் முந்திச் செல்லும் போது எதிரே வந்த இரண்டு வாகனங்களுடன் மோதியுள்ளார்.

டிசினோ கன்டோனல் பொலிசாரின் கூற்றுப்படி, அந்த நபர் மதியத்துக்கு  முன்னர், அக்னோ டிஐ திசையில் கன்டோனல் வீதியில் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் நோயாளர் காவுவண்டி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து காரணமாக நீண்ட நேரம் குறித்த வீதி மூடப்பட்டிருந்தது.

ஆங்கிலம் மூலம் – The swiss times

Related Articles

Latest Articles