21.6 C
New York
Friday, September 12, 2025

சைமன் ஸ்ரொக்கர் எம்.பியின் பதவி தப்பியது – உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு.

எஸ்பி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சைமன் ஸ்ரொக்கர்  தெரிவு செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, Schaffhausen உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஸ்ரொக்கரின் இருப்பிடம் உண்மையில் Schaffhausenஇல் உள்ளதா என்று மனுதாரர் கேள்வி எழுப்பியிருந்தார்.

தேர்தல் நேரத்தில் ஸ்ரொக்கரின் வழக்கமான குடியிருப்பு Schaffhausenஇல் இருந்தது என்றும், எனவே முறைப்பாடு ஆதாரமற்றது என்றும், உச்ச நீதிமன்றம் நேற்று வெளியிட்ட  தீர்ப்பில், தெரிவித்துள்ளது.

எனினும், ஸ்ரொக்கரின் குடும்பம் சூரிச்சில் வசிக்கிறது. ஆனால் அவர் Schaffhausenஇல் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்துள்ளார். குழந்தைகள் வசிக்கும் இடம்தான்  அவரது வாழ்க்கையின் மையம் என்று மனுதாரர் நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தார்.

இந்த தீர்ப்புக்கு எதிராக பெடரல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles