-0.7 C
New York
Sunday, December 28, 2025

பொலிசாரைக் கண்டதும் ஆற்றில் குதித்தவர் சடலமாக மீட்பு.

லூசேர்ன் பொலிஸ் ரோந்துப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட போது, தப்பிச் சென்று ஆற்றில் குதித்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஜூன் 30 ஆம் திகதி, 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

சந்தேகத்திற்கிடமான நபரின் நடத்தை காரணமாக பொலிசார் அவரை சோதனை செய்ய விரும்பினர்.

அவர் போதைப்பொருள் குற்றத்துடன் தொடர்புடையவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

Reuss ஆற்றில்  St. Karli Bridge பகுதியில் குதித்த அவரை கண்டுபிடிக்க பொலிசார் பாரிய தேடுதல்களை நடத்தியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், கடந்த 8ஆம் திகதி அவரது சடலம், Aargau கன்டோனில் உள்ள Reuss  ஆற்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக சட்டமா அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மூலம் -20min

Related Articles

Latest Articles