சுவிசில் புகலிடம் கோருபவர்களில் ஆதரவற்ற சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
2023 ஆம் ஆண்டில், 3,271 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறார் புகலிடக் கோரிக்கையாளர்கள் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
இது 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாரிய அதிகரிப்பாகும். அப்போது இந்த எண்ணிக்கை 2,450 ஆக இருந்தது.
இதன் அதிகரிப்பின் காரணமாக கன்டோன்கள் அதிகளவு நெருக்கடியைச் சந்திக்கின்றன.
இருப்பினும், இப்போது பரிசோதிக்கப்பட்ட ஆதரவற்ற சிறார் புகலிடக் கோரிக்கையாளர்களில் பாதி பேர் ஏற்கனவே பெரியவர்கள் என்பதைக் காட்டுவதாக இடம்பெயர்வுக்கான பெடரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வயது மதிப்பீடுகள் புகலிட நடைமுறைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஆதரவற்ற சிறார் புகலிடக் கோரிக்கையாளர்கள் சிறப்புப் பாதுகாப்பை அனுபவிக்கிறார்கள்.அவர்களின் புகலிட விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இதனால் பலரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
சுவிட்சர்லாந்தில் ஆதரவற்ற சிறார் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் கடுமையாக அதிகரித்துள்ளது.
அனைத்து புகலிட விண்ணப்பங்களிலும் அவர்கள் பத்து சதவீதத்திற்கும் அதிகமானவர்கள்.
அவர்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆண்கள் மற்றும் அவர்களில் பெரும்பாலோர் 16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.
மூலம் -20 min