பேர்ண் கன்டோனில் Kehrsatz இல் உள்ள அடுக்குமாடி வீடு ஒன்றில் நேற்று இரவு தீவிபத்து ஏற்பட்டது.
நேற்றிரவு 11.30 மணியளவில் இந்த தீவிபத்து குறித்த தகவல் கிடைத்ததாக பேர்ண் கன்டோனல் பொலிஸ் தெரிவித்துள்ளது.
தீவிபத்துக்கான காரணம் தெரியாத போதும், அந்த வீடு முழுவதும் தீப்பற்றியிருந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
அதிகாலை 2 மணியளவில் தீ முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகள் இதில் சேதமடைந்துள்ளன.
இங்கிருந்த 5 பேர் உயிர் தப்பியுள்ளனர். அவர்களில் ஒருவர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
மூலம் -20 min