Lachen இல் இன்று அதிகாலை இரண்டு குடும்பங்கள் வசிக்கும், வீடு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில், வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்தார்.
Lachen இல் உள்ள Bauernhofstrasse இல் இன்று அதிகாலை 3:40 மணியளவில், இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
வீட்டின் கூரை ஜன்னலில் இருந்து புகை வெளியேறுவதாக Schwyz கன்டோனல் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
Pfäffikon தீயணைப்பு நிலையத்தின் ஆதரவுடன் Lachen தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஒரு குடும்பம் எரியும் வீட்டிலிருந்து சரியான நேரத்தில் பாதிப்பில்லாமல் வெளியேற முடிந்தது.
அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்ட போது மற்ற அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 79 வயது மூதாட்டி தீயை அணைத்த பின்னரே சடலமாக மீட்கப்பட்டார்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
மூலம் – Zueritoday