-0.7 C
New York
Sunday, December 28, 2025

சூரிச்சில் குவியும் ஆயிரக்கணக்கான ஜெகோவாவின் சாட்சிகள்.

சூரிச்சில் நடைபெறவுள்ள மூன்று நாள் மாநாட்டுக்காக ஆயிரக்கணக்கான ஜெகோவாவின் சாட்சிகள் சுவிற்சர்லாந்துக்கு படையெடுத்து வருகின்றனர்.

நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரை- சூரிச்சின் Letzigrund அரங்கில் ஜெகோவாவின் சாட்சிகளின் மாநாடு நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில்உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 24 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.

இவர்கள் இரவில் தங்குவதற்கு சூரிச் நகரைச் சுற்றியுள்ள 10 ஹொட்டேல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு 13 மொழிகளில் உதவிகளை வழங்குவதற்கு 5,203 உதவியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாநாட்டுக்கு உலகெங்கும் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரவுள்ளனர்.

சூரிச் விமான நிலையத்தில் அவர்களை வரவேற்று, தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திங்கட்கிழமை மட்டும் 2000 பேர் சூரிச் வந்துள்ளனர். நேற்று 900 பேர் வந்த நிலையில் இன்று பெருமளவானோர் வந்து குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம் – 20min

Related Articles

Latest Articles