Bernina Pass இல், நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் (33) மற்றும் சைக்கிள் ஓட்டுநர் (22) ஆகியோர் காயமடைந்தனர்.
மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் கார் ஒன்றை முந்திச் செல்ல முயன்ற போது, சைக்கிளில் சென்றவர் மீது மோதியுள்ளார்.
இதனால் இரண்டு பேரும் காயமடைந்த வீதியில் பல மீற்றர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டனர்.
படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தினால் தடைப்பட்ட போக்குவரத்து 5 மணிநேரத்துக்குப் பின்னர் மீண்டும் வழமைக்குத் திரும்பியது.
மூலம் – மூலம்.- 20min