Gotthard நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கிய பகுதியில் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் நேற்று பிற்பகல் 14 கிலோமீட்டர் நீளத்துக்கு வாகனங்கள் காத்திருக்கும் நிலை காணப்பட்டது.
- Advertisement -

வடக்கு திசையில் பயணம் செய்த வாகனம் ஒன்று பழுதடைந்ததால், சுரங்கப்பாதையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
அந்த வாகனம் அகற்றப்பட்ட பின்னரே ஓரளவுக்கு நிலைமை சுமுகமாகியது.
எனினும் தெற்கு நோக்கிய பாதையில், இதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம் – The swiss times


