28.6 C
New York
Wednesday, August 19, 2026

பாரிஸ் ஒலிம்பிக் தொடக்கவிழாவில் சுவிஸ் கொடியை ஏந்தப் போவது யார்?

பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவில் சுவிஸ் நாட்டுக் குழுவின் கொடியை, துப்பாக்கி சுடும் வீராங்கனை நினா கிறிஸ்டன் மற்றும் மலைச் சைக்கிளோட்ட வீரர் நினோ ஷூர்டர் ஆகியோர் ஏந்திச் செல்வார்கள் என்று சுவிஸ் ஒலிம்பிக் அறிவித்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் தொடக்கவிழா இன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இதில் சுவிஸ் நாட்டின் விளையாட்டு வீரர்களும், பங்கேற்கின்றனர்.

இந்த தொடக்க விழாவில், சுவிஸ் கொடியை ஏந்திச் செல்லும், துப்பாக்கி சுடும் வீராங்கனை நினா கிறிஸ்டன் 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்றவர்.

மலைச் சைக்கிளோட்ட வீரர் நினோ ஷூர்டர் பீஜிங், லண்டன், றியோடி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டிகள் உள்ளிட்ட 10 சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம் – Swissinfo

Related Articles

Latest Articles